சென்னையில் போலீஸ், மீடியா, மாநகராட்சி என போலி ஸ்டிக்கர் ஒட்டி வாகனம் ஓட்டிய 94 பேர் மீது வழக்கு

ஊரடங்கில் போலீஸ், மீடியா, மாநகராட்சி என போலி ஸ்டிக்கர் ஒட்டி பயணம் செய்த 94 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸ், மீடியா, மாநகராட்சி என போலி ஸ்டிக்கர் ஒட்டி வாகனம் ஓட்டிய 94 பேர் மீது வழக்கு
கோப்புப் படம்
  • Share this:
சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. இந்த முழு ஊரடங்கு கடுமையாக பின்பற்றபட்டு வருகிறது.

அதனடிப்படையில் அத்தியாவசிய தேவைகள் தவிர அனாவசியமாக வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவசர பணிகளுக்கு செல்வதாக பத்திரிகை துறை, காவல்துறை, மாநகராட்சி, கோவிட் பணி என போலியாக அனுமதி சீட்டு ஒட்டி வந்துள்ளதாக மொத்தம் 94 நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


மேலும்  கடந்த 13 நாட்களில் மட்டும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக கூறி 84,355 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதே போல் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியதாக 70,726 வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாமல் வெளியே சுற்றியதாக 13 நாட்களில் 31,271 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதில் குறிப்பாக நேற்று மட்டும் ஊரடங்கை மீறியதாக 7,301 வழக்குகள் பதிவு செய்திருப்பதாகவும்,5,226  வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... போலியான முகவரியால் குழப்பம்... கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்..

மேலும் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வெளியே சுற்றியதாக 2,051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading