கோவில் திருவிழா வசூல் விவகாரத்தில் தகராறு - டாஸ்மாக்கில் வைத்து பாக்ஸர் கொலை

கிக் பாக்சரான ஹரிதாசை நெருங்க முடியாததால், அவர் தினமும் மது அருந்தும் இடத்திற்கே சென்று கொலை செய்ததாக 8 பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: July 8, 2019, 2:51 PM IST
கோவில் திருவிழா வசூல் விவகாரத்தில் தகராறு - டாஸ்மாக்கில் வைத்து பாக்ஸர் கொலை
கிக் பாக்சர் ஹரிதாஸ்
Web Desk | news18
Updated: July 8, 2019, 2:51 PM IST
சென்னையை அடுத்த அம்பத்தூரில் டாஸ்மாக் கடையில் கிக் பாக்சரை கொலை செய்த வழக்கில், ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த அம்பத்தூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஹரிதாஸ். ஆட்டோ ஓட்டுநரான இவர் ஒரு கிக் பாக்சர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மதுபான கடையில் ஹரிதாஸ் மது அருந்தி கொண்டு இருந்தார்.

அப்போது 8 பேர் கொண்ட கும்பல் திடீரென மதுக்கடை உள்ளே புகுந்து அங்கிருந்த ஹரிதாசை சரமாரியாக குளிர்பான பாட்டிலால் தாக்கியும், வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.

மதுபான கடையில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று விசாரணை நடைபெற்று வந்தது.

கொலையாளிகள் திருமுல்லைவாயிலில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் சென்று தேடினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாலாஜி, மணிகண்டன், கரிகாலன், செந்தில் உள்ளிட்ட 8 பேரையும் சுற்றி வளைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

கடந்தாண்டு அம்பத்தூர் திருவள்ளுவர் நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் வசூலான பணத்தை ஹரிதாஸ் சரிவர கணக்கு காட்டவில்லை என்றும் மேலும் ஹரிதாஸ் மார்க்கெட் பகுதியில் யாரும் கடை போடக்கூடாது என மிரட்டி வந்தாலும், அவரை கொலை செய்ததாக கொலையாளிகள் 8 பேரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

டாஸ்மாக் கடை


அத்துடன், வருகிற திருவிழாவில் பணத்தை வசூல் செய்ய ஹரி இருக்கக் கூடாது என முடிவு செய்து அவரை தீர்த்துக் கட்ட 8 பேரும் ஸ்கெட்ச் போட்டுள்ளனர். ஆனால், கிக் பாக்சரான ஹரிதாசை நெருங்க முடியாமல் இருந்து வந்த நிலையில், தினமும் மது அருந்தும் இடத்திற்கே சென்று அவரை கொலை செய்ததாகவும் 8 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இவர்களுக்கு ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளதை அடுத்து முகப்பேரில் உள்ள நீதிபதி வீட்டில் கொலையாளிகளை ஆஜர் செய்து தனிப்படை காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Also see... நெருங்க முடியாத கிக் பாக்சரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த கும்பல் 

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...