• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சொத்துக்காக மகன்கள் தன்னை அடித்து துன்புறுத்துகின்றனர் - காவல் ஆணையரிடம் கண்ணீருடன் புகாரளித்த 80 வயது மூதாட்டி

சொத்துக்காக மகன்கள் தன்னை அடித்து துன்புறுத்துகின்றனர் - காவல் ஆணையரிடம் கண்ணீருடன் புகாரளித்த 80 வயது மூதாட்டி

மகன்கள் சொத்துக்காக தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த 80 வயது மூதாட்டி

மகன்கள் சொத்துக்காக தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த 80 வயது மூதாட்டி

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தனது மகன்கள் சொத்துக்காக தன்னை அடித்து துன்புறுத்துவதாக 80 வயது மூதாட்டி புகாரளித்துள்ளார்.

  • Share this:
தனது 5 மகன்களும் சொத்துக்காக தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனது பிரச்னையைத் தீர்த்துவைக்கும்படியும் சென்னை காவல் ஆணையரகத்துக்கு புகாரளிக்க வந்த 80 வயது மூதாட்டி ஒருவர், தான் சென்னை கொசபேட்டையைச் சேர்ந்த பேபியம்மாள் (80) என்று கூறினார். தனக்கு 5 மகன்களும் 4 மகள்களும் உள்ளதாகவும், தனது கணவர் பார்த்தசாரதி 20 வருடத்திற்கு முன்பு கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வெளிவந்து பின்னர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனக்குச் சொந்தமாக கொசப்பேட்டை மார்க்கெட் பகுதியில் 1.5 கிரவுண்ட் இடத்தில் ஒரு வீடு உள்ளதாகவும், அந்த வீட்டின் மாடியில் தனியாக தங்கி வருவதாகவும் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக தனது மகன்கள் அவர்களது மனைவியுடன் சேர்ந்து உணவு கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி அடித்து துன்புறுத்தி வருவதாகத் தெரிவித்த பேபியம்மாள், இதுகுறித்து அப்போதே ஓட்டேரி காவல் நிலையத்தில் புகாரளித்து இருப்பதாகவும், ஆனால் கடந்த 2 வருடங்களாகியும் போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

Also read: அநாகரீகமான வீடியோக்கள் வருவதாக தொடர் புகார் - டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை



தொடர்ந்து பேசிய அவர், அரசு முதியவர் உதவித் தொகையில் வாழ்ந்து வருவதாகவும் இன்று மதியம் தன்னை வீட்டைவிட்டு வெளியே போகும்படி சொல்லி மகன்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறி தனக்கு உதவி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலக காவலர்கள் குறிப்பிட்ட காவல் நிலையம் மூலமாக நடவடிக்கை எடுக்க வைப்பதாக உறுதியளித்து, காவல் வாகனம் மூலமாக அவரது வீட்டுக்கு மூதாட்டியை அழைத்துச் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: