சென்னையில் நாளை முதல் 720 டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு - என்னென்ன ஏற்பாடுகள்...?

கோப்புப் படம்.

சென்னை மண்டலத்தில் நாளை முதல் மொத்தம் 720 டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகளும் தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மற்ற மதுபான சில்லறை விற்பனை கடைகள் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் நாளை முதல் இயங்கும் எனவும், வணிக வளாகங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும்,
மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னையை பொருத்தவரை மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மண்டலங்களை உள்ளடக்கி உள்ளது. ஏற்கனவே திருவள்ளூர் மேற்கு மற்றும் காஞ்சிபுரம் தெற்கு ஆகிய பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

Also read... EMI கட்ட வழியில்லை... சைக்கிளில் டீ விற்கும் வாடகை கார் உரிமையாளர்

மீதம் உள்ள பகுதியில் இருக்ககூடிய கடைகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள கடைகள் தவிர மொத்தம் 720 கடைகள் திறக்கப்படும் எனவும், ஒரு மணி நேரத்தில் 50 டோக்கன் என்ற அடிப்படையில் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வாடிக்கையாளர்கள் நிற்க 3 அடி இடைவெளி விட்டு 50 வட்டங்கள் பிளீச்சிங் பவுடரால் அமைக்கவும், கடையில் போதிய இடம் இருப்பின் 2 கவுன்ட்டர்களை அமைத்துக்கொள்ளவும்,
தேவைப்படும்போதெல்லாம் கடையின் சுற்றுபுறம் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ளவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், அனைத்து வாடிக்கையாளர்களையும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கவுன்டரில் அனுமதிக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published: