சென்னையில் கூடுதலாக 6,500 கேமராக்கள் பொருத்த முடிவு..!

2019 - வரதட்சனை தொடர்பான மரணங்களே இல்லை.

சென்னையில் கூடுதலாக 6,500 கேமராக்கள் பொருத்த முடிவு..!
ஏ.கே. விஸ்வநாதன்
  • News18
  • Last Updated: January 2, 2020, 10:41 AM IST
  • Share this:
பெண்கள் பாதுகாப்பிற்காக சென்னையில் இரண்டாயிரம் இடங்களில் 6,500 கேமராக்களை நிர்பையா திட்டத்தின் கீழ் பொருத்த சென்னை மாநகரக் காவல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் சென்னையில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக சென்னைக் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வனாதன் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் “ போக்குவரத்து விபத்துகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் ஆயிரம் வழக்குகள் குறைந்து 6,871ஆகப் பதிவாகியுள்ளன. சாலை உயிரிழப்புகளைப் பொறுத்தவரை 2018 - ல் 1,297ஆக இருந்த நிலையில் 2019-ல் 1,252 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வரதட்சனை தொடர்பான மரணங்கள் 2019 ஆண்டு நடைபெறவில்லை . காவலன் செயலியை இதுவரை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகக் கூறினார்.

மேலும் “ தோழி திட்டமும் பெண்களுக்குப் பயனுள்ளதாக இருந்துள்ளது. அதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் 113 கோடி செலவில் 6,500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவை சென்னையில் முக்கியமான 2000 இடங்களில் பொருத்த முடிவு செய்யப்ப்பட்டுள்ளது. அதேப்போல் இந்தியாவிலேயே சென்னைதான் மிகவும் பாதுகாப்பான இடம் என்ற பெருமையும் கொண்டிருக்கிறது.


அதோடு 2019 ஆண்டு சிறந்த ஆளுமைக்கான விருது தமிழக முதல்வரின் விருதைப் பெற்றுள்ளோம். அதோடு சிசிடிவி அதிகம் பொருத்தியது, பணமில்லா இ- செலான் அபராத முறை, தூய்மையான காவல் நிலையம் ஆகியவற்றுக்கான தேசிய அளவிலான ஸ்காச் விருதும் சென்னை மாநகர காவல் துறைக்குக் கிடைத்துள்ளது என்றுக் கூறினார்.

  

 
First published: January 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்