• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் சினிமா நடிகர் வீட்டில் ₹ 50 லட்சம் பணம், 5 சவரன் நகை திருட்டு - இருவர் கைது

சென்னையில் சினிமா நடிகர் வீட்டில் ₹ 50 லட்சம் பணம், 5 சவரன் நகை திருட்டு - இருவர் கைது

நடிகர் அருண் பாலாஜி

நடிகர் அருண் பாலாஜி

சென்னையில் சினிமா நடிகரின் வீட்டில் ரூபாய் 50 லட்சம் பணமும் 5 சவரன் நகையும் திருடு போனதையடுத்து அதுதொடர்பாக இருவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share this:
சென்னை திருவல்லிக்கேணி வி.ஆர் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அருண் பாலாஜி (37). இவர் அட்றா மச்சான், விசிலு, சேவற்கொடி, சும்மாவே ஆடுவோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மீன்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழிலையும் மெட்டல் ட்ரேட் வியாபாரமும் செய்து வருகிறார்.

இரண்டு தளங்களைக் கொண்ட இவரது வீட்டின் கீழ்தளத்தில் அருண் பாலாஜியின் தாயும், முதல் தளத்தில் அருணும் வசித்து வருகின்றனர். தற்போது முதல் தளத்திலுள்ள வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அருண் பாலாஜி ஒரு வாரத்துக்கு முன் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ளார்.

Also read: காதலிக்குமாறு பெண்ணை வற்புறுத்திய வாலிபர் - தட்டிக்கேட்ட அண்ணனின் பைக் எரிப்பு



இந்நிலையில், வீட்டில் பீரோவின் மேல் வைத்திருந்த ரூபாய் 50 லட்சம் பணத்தையும் 5 சவரன் நகையையும் காணவில்லை என அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். மேலும், வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து வந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து சென்னை தி.நகரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன், இளங்கோவன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தாங்கள் ரூபாய் 5 லட்சம் மட்டுமே பணத்தை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து ரூபாய் 67,000 பணம், 5 சவரன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: