Home » News » Tamil-nadu » CHENNAI 5 PEOPLE ARRESTED FOR FISHERMAN MURDERED IN CHENNAI VAI

மதுபோதையில் மீனவர் வெட்டி படுகொலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது

சென்னையை அடுத்த எண்ணூர் அருகே மதுபோதையில் மீனவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் மீனவர் வெட்டி படுகொலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது
மாதிரிப்படம்
  • Share this:
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் காசி விசலாட்சிபுரம் பகுதியை சேர்ந்த மீனவர் தமிழரசன். அதே பகுதியை சேர்ந்த அமுத நிரஞ்சன் என்பவருடன் நேற்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது இருவரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதை பார்த்த அமுத நிரஞ்சனின் உறவினர்கள், தமிழரசனை அரிவாளால் வெட்டினர்.

இதில், தமிழரசனுக்கு, 7 இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் எண்ணூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் காவல்துறையினர் தமிழரசனை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்தார். எண்ணூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமுத நிரஞ்சன் மற்றும் அவரது உறவினர்களான சிங்காரவேலன், மைக் டைசன், அலெக்ஸ் ராஜேஷ், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.


மேலும் படிக்க...

திருப்பதி தேவஸ்தானத்தில் மேலும் 4 அர்ச்சகர்களுக்கு கொரோனா

கொல்லப்பட்ட தமிழரசன் மீது, வழிப்பறி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் எண்ணூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading