'சென்னையில் 45% விற்பனை குடிநீர் பாதுகாப்பானது அல்ல' - தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சென்னை மாநகராட்சி அறிக்கை..

சென்னையில் விற்கப்படும் அடைக்கப்பட்ட குடிநீரில் 45 சதவீதம் பாதுகாப்பானவை அல்ல என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

'சென்னையில் 45% விற்பனை குடிநீர் பாதுகாப்பானது அல்ல' - தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சென்னை மாநகராட்சி அறிக்கை..
சென்னை குடிநீரில் 45% பாதுகாப்பானது அல்ல
  • Share this:
சென்னையில் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள், குடிநீர் கேன்கள் மற்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து 187 மாதிரிகளை சேகரித்த சென்னை மாநகராட்சி அவற்றை ஆய்வுக்கு அனுப்பியது. அன்றாடம் மக்கள் அருந்தும் இந்த குடிநீரின் தரம் குறித்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்றவை என்பது தெரியவந்தது. எஞ்சியுள்ள 147 மாதிரிகளில் 30-இல் பாக்டீரியா பரவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 மாதிரிகள் போலியான நிறுவனங்களின் பெயரில் விற்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. இந்த விவரங்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம், சென்னை மாநகராட்சி தாக்கல் செய்துள்ளது.

ALSO READ |   Gold Rate | சற்றே குறைந்த தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?


இது போன்ற தரமற்ற நீரை அருந்துவதால் வயிற்றுப்போக்கு, காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் மக்கள், அதனோடு இலவச இணைப்பாக நோய்களை வாங்கி வரும் சூழலுக்கு ஆளாகாமல் தவிர்க்க, தரமற்ற நீரை விற்கும் தண்ணீர் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: October 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading