சென்னை தியாகராய நகரில் 4.50 கிலோ தங்கம் கொள்ளை.. கள்ளக்காதலியால் குற்றவாளி சிக்கியது எப்படி..?

சென்னை தியாகராய நகரில் மொத்த நகைக் கடையில் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள நாலரைக் கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலியின் தகவலின் பேரில் குற்றவாளி சிக்கியது எப்படி?

  • Share this:
சென்னை தியாகராய நகர் மூசா தெருவில் உத்தம் என்ற பெயரில் மொத்த வியாபார நகை கடை 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 21-ஆம் தேதி காலை கடையைத் திறந்தபோது, இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நாலரைக் கிலோ தங்கம், வைரம், வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். சிசிடிவியில் சிவப்பு நிற முககவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒரு நபர், மதில் சுவர் ஏறி குதித்து நகைகளை திருடி வரும் காட்சியும், பின்னர் அந்த நபர் தெரு முனையில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு நபருடன் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளன.

இருவரும் நள்ளிரவில் நகைகளைக் கொள்ளையடித்து அதிகாலையில் மக்களோடு மக்களாகக் கலந்து சென்று தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில், திருவள்ளூரைச் சேர்ந்த 44 வயது மார்க்கெட் சுரேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. திருவள்ளூரில் வசிக்கும் அவரது கள்ளக்காதலி உமாதேவியைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர்களின் சந்தேகம் உறுதிப்பட்டது.

மேலும் படிக்க...Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 27, 2020)


இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி துரைப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மார்க்கெட் சுரேஷைத் தேடி வந்தனர். புட்லூர் ரெயில் நிலையம் அருகே கூவம் ஆற்றிற்குள் சந்தேகத்திற்கு இடமாக திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவர் தான் மார்க்கெட் சுரேஷ் எனத் தெரியவந்தது.

 
 

இதையடுத்து மார்க்கெட் சுரேஷை சென்னை அழைத்து வந்த போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள பல நகைக் கடைகளில் கைவரிசை காட்டியவர் மார்க்கெட் சுரேஷ் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மார்க்கெட் சுரேஷிடம் இருந்து 7 கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading