• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குத்தகை, வாடகை வீடு தேடுவோரைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..

குத்தகை, வாடகை வீடு தேடுவோரைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..

குற்றவாளிகள்

குற்றவாளிகள்

சென்னையில் குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த கும்பல் பற்றி, சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் அகர்வாலிடம் வீடியோ கால் மூலமாக புகார்கள் குவிந்தன. 

  • Share this:
வாடகை வீடு தேடுவோர்களை குறிவைக்கும் மோசடி கும்பல் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களை கொண்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகார்தாரர்கள்  கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் கிழக்கு தாம்பரம், அந்தோணி தெருவில் செயல்பட்டு வந்த சன் சைன் ப்ராப்பர்ட்டி டெவலப்பர்(Sun shine Property Developer) என்ற நிறுவனம்தான் வீடு வாடகைக்கு தேடி வரும் நபர்களை குறிவைத்து பல கோடி ரூபாய்களை ஏமாற்றியது தெரியவந்தது.

படிக்க... Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஆகஸ்ட் 28, 2020)

புகார்தாரர்கள் கொடுத்த தகவலை வைத்து போலீசார் விசாரணை துவங்கியதிலிருந்து தலைமறைவாக இருந்த சன் ஷைன் ப்ராப்பர்ட்டி டெவலப்பர் நிறுவன உரிமையாளரான  ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ், நிறுவன நிர்வாகிகளான காயத்ரி மற்றும் காயத்ரியின் கணவரான விக்னேஷ் ஆகியோர் அலுவலகத்தை பூட்டி விட்டு பல நாட்களாக தலைமறைவாகியுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் தொடர் தேடுதலின் அடிப்படையில்  மோசடி கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பிரகாஷ், காயத்ரி, மற்றும் காயத்ரியின் கணவரான விக்னேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் மோசடி அரங்கேற்றியது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

படிக்க...மதுரையில் பூட்டிய விடுதிக்குள் பாலியல் தொழில் - மூவர் கைது

தாம்பரம், சேலையூர், பம்மல், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், மேடவாக்கம், நன்மங்கலம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் வாடகைக்கு தயார் நிலையில் உள்ள வீடுகளை இவர்கள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு பின்னர் அந்த வீட்டை லீஸ் அடிப்படையிலும் மாத வாடகை அடிப்படையிலும் வாடகைக்கு விடுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.எல்.எக்ஸ், 99acres.com, nobrokers.com போன்ற செயலிகளிலும் விளம்பரம் கொடுத்துள்ளனர்.

விளம்பரத்தை பார்த்து சன் ஷைன் நிறுவனத்தை நாடும் வாடிக்கையாளர்களிடம் இவர்கள், தங்களை வீட்டு உரிமையாளர்கள் என போலி பத்திரங்கள் மூலம் அடையாளப்படுத்திக்கொண்டு, லீஸ் மற்றும் வாடகைக்கான சட்டப்படியான ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

படிக்க...’விஷம் கொடுத்தே சுஷாந்த்தை ரியா கொன்றுள்ளார்...’ தந்தை கே.கே.சிங் பகீர் புகார்

ரூ.5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரையிலும் லீஸூக்கு விட்டும், மாத வாடகையாக ரூபாய் 10,000 முதல் ரூபாய் 20,000 வரை வசூலித்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த நிறுவனம் இதுபோன்று ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது

மேலும், வீட்டின் உரிமையாளர்களிடம் சன் ஷைன்ஸ் நிறுவனம் குறைவான வாடகையை கொடுத்தும், பின் தாங்கள் லீஸ் மற்றும் வாடகைக்கு விடும் வாடிக்கையாளர்களிடம் அதிகமாக பணம் வசூலித்ததும் தெரியவந்தது.



இந்த நிறுவனம் கடந்த 2019 டிசம்பர் மாதம் வரை வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகையை சரியாக கொடுத்து வந்துள்ளனர். அதன் பின்பு 2020 ஜனவரி மாதம், முதல் இவர்கள் வாடகை பணத்தை தராததால் வீட்டின் உரிமையாளர்கள் தற்போது அந்த வீட்டில் குடியிருக்கும் நபர்களிடம் வந்து விசாரித்துள்ளனர்.

படிக்க... அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மைல்கல் - ராமதாஸ்

அப்படி விசாரிக்கையில்தான் இந்த நிறுவனம் உண்மையான வீட்டு உரிமையாளர்களையும் தற்போது வீட்டில் குடியிருந்து வரும் வாடகைதாரர்களையும் ஏமாற்றி உள்ளனர் என்பது தெரியவந்தது.

பின்னர் வீட்டின் உண்மையான உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்போர்களும் இந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது நிறுவனத்தார்கள் தங்களை ஏமாற்றி விட்டு தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது.
இதேபோல 100-க்கும் மேற்பட்டோர்களிடம் இவர்கள் ரூபாய் 2.5 கோடிக்கும் மேல் ஏமாற்றியுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க... அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - கி.வீரமணி

மேலும், மோசடி செய்த பணத்தை வைத்து சினிமா மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து பணம் சம்பாதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரகாஷ் என்பவர் இணை தயாரிப்பாளராக வெள்ளைப்புறா, மஞ்ச குருவி என்ற திரைப்படங்கள் தயாரித்ததும் அதில் 40 லட்ச ரூபாய் அளவில் முதலீடு செய்து பிரபல நடிகை, நடிகர்களை நடிக்க வைத்தது தெரியவந்துள்ளது.

சன் ஷைன் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி பிரகாஷ், காயத்ரி மற்றும் அவரின் கணவரான விக்னேஷ் ஆகியோர் சென்னையில் லீஸ், வாடகைக்கு வீடு தேடுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் என பல நபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி இருப்பது வாடகைக்கு வீடு தேடுவோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: