சென்னையில் வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை.. 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை..

Youtube Video

சென்னையில் வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் என்ன?

 • Share this:
  ராஜஸ்தான் மாநிலம் பிரோகி மாவட்டத்தை  பூர்விகமாக கொண்டவர் தலில்சந்த். இவருக்கு புஷ்பா பாய் என்ற மனைவியும், சீத்தல் என்ற மகன் மற்றும் பிங்கி என்ற மகளும் உள்ளனர்.  இவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வினாயகர் மேஸ்திரி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். தலில்சந்த சவுகார்பேட்டையில் பைனான்ஸ் விடும் தொழிலை செய்து வந்துள்ளார். இவருடைய மகள் பிங்கி திருமணமான பின்பு கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

  இந்த நிலையில் மகள் பிங்கி நேற்று இரவு 7.15 மணியளவில் தனது தந்தை வீட்டிற்கு சாப்பாடு எடுத்து வந்துள்ளார். அப்போது படுக்கையில் தந்தை தலில்சந்த், தாய் புஷ்பா, தம்பி சீத்தல் ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதை கண்டதும் அதிர்ந்து உடனடியாக யானைகவுனி போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார்.

  தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் பிரிவு போலீசார், தடயவியல் துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சீத்தலுக்கு புனேவை சேர்ந்த ஜெயமாலா என்ற பெண்ணுடன் திருமணமாகி 13 மற்றும் 11 வயதுகளில் இரண்டு மகள்கள் இருப்பதும் சமீபத்தில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு எழுந்து சீத்தல் சென்னையிலும் அவரது மனைவியான ஜெயமாலா தனது பிள்ளைகளுடன் புனேவில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் ஜெயமாலா தனது கணவர் சீத்தல் மீது ஜீவானாம்ச வழக்கு தொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

  அதேபோல தலீல்சந்த்க்கும் அவரது உறவினர்களுக்கும் சொத்து தகராறு இருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை நடந்ததாக சொல்லப்படும் நேரத்தில் புனேவை சேர்ந்த சீத்தலின் உறவினர்கள் வந்து சென்றதாக போலீசார் விசாரணையில் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  சம்பவ இடத்துக்கு வந்த சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை காவல் துறை வடக்கு கூடுதல் ஆணையர் அருண், வடக்கு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

  மேலும் படிக்க...#BREAKING | நவம்பர் 16 அன்று பள்ளிகள் திறக்கப்படாது - தமிழக அரசு அறிவிப்பு

  புதுமணப்பெண் தற்கொலை.. விசாரணையில் சிக்கிய கணவன், அண்ணி.. நடந்தது என்ன?

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், கொலை நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் ஆராய்ந்து வருவதாகவும். தடயவியல் துறையினர் ரேகை பதிவுகளை சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் கொலைக்கான காரணம் குற்றவாளிகள் பிடிக்கப்பட்ட பின்னரே தெரியவரும் என்றார்.
  Published by:Vaijayanthi S
  First published: