மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்

நேற்று விமான நிலையம் - ஏர்போர்ட் இடையே நேற்று சிக்னல் கோளாறு காரணமாக அரை மணிநேரம் சேவை தடைபட்டது.

மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்
மெட்ரோ ரயில் - கோப்பு படம்
  • News18
  • Last Updated: May 1, 2019, 4:04 PM IST
  • Share this:
சென்னை மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 ஊழியர்களை நிர்வாகம் இன்று சஸ்பெண்ட் செய்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணி வரன்முறை செய்யவேண்டும், அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கக்கூடாது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று மற்றும் இன்று ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்வதால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களை கொண்டு ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Loading...

ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம், மெட்ரோ ரயில் நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை ஆணையம் இணைந்து நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், நேற்று விமான நிலையம் - ஏர்போர்ட் இடையே நேற்று சிக்னல் கோளாறு காரணமாக அரை மணிநேரம் சேவை தடைபட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மெட்ரோ நிர்வாகம், தவறான கட்டளையை கொடுத்து சிக்னல் கோளாறு ஏற்படுத்தியதாக மனோகரன், பிரேம் குமார், சிந்தியா ரோஷன் சாம்சன் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
First published: May 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...