பொதுப்போக்குவரத்து முடக்கம்: சென்னையில் பழைய பைக் மற்றும் கார் விற்பனை 20 - 30% அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில், சென்னையில் பழைய பைக் மற்றும் கார் விற்பனை 20 - 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொதுப்போக்குவரத்து முடக்கம்: சென்னையில் பழைய பைக் மற்றும் கார் விற்பனை 20 - 30% அதிகரிப்பு
சென்னையில் ஊரடங்கால் பழைய பைக் மற்றும் கார் விற்பனை 20 - 30 சதவீதம் அதிகரிப்பு!
  • Share this:
பொதுப் போக்குவரத்து என்பது சமூக கட்டமைப்பின் முக்கிய அம்சம். மனிதர்களை இணைக்கும் புள்ளியாக மட்டும் இல்லாமல் சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கணிசமாகக் குறைப்பதும் பொதுப் போக்குவரத்துதான்.

சென்னையைப் பொருத்தவரை காற்று மாசுபாட்டை குறைக்க அரசு மெட்ரோ ரயில், பறக்கும் ரயில், ஸ்மார்ட் பைக், பேட்டரி பேருந்துகள் எனப் பொதுப்போக்குவரத்தை அதிகரித்துவரும் நிலையில், கொரோனா ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்தையும்  முடக்கிவிட்டது.

முழுமையான ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருந்த மக்கள் தற்போது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளதால் மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றனர். கல்வி நிறுவனங்களை தவிர கிட்டத்தட்ட அத்தனை நிறுவனங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன. ஆனால் மக்கள் பயணப்படும் பொதுப் போக்குவரத்து மட்டும் இன்னும் தொடங்கவில்லை.


அதேபோல் சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். பொதுப் போக்குவரத்தை மட்டும் நம்பியிருந்த மக்கள் எப்படியாவது பழைய பைக் மற்றும் கார் வாங்கி சொந்த ஊர் சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

இதன் காரணமாக பழைய பைக், கார்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஹோண்டா சிட்டி, ஷிப்ட் ஐ10 போன்ற பட்ஜெட் கார்களை தேடி மக்கள் வரும் நிலையில் பெரும்பாலான நிதி நிறுவனங்கள் வாகன கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் பட்சத்தில் விற்பனை மேலும் சூடுபிடிக்க வாய்பிருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விவரிக்கும் அவர்கள், கடந்த 4 மாதங்களை ஒப்பிடுகையில் இந்த மாதம் 20% முதல் 30% விற்பனை அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர்.

Also read: தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிப்புஇதேபோல் பழைய பைக்குகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. சொந்த ஊர் பயணம் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்காவும் மக்கள் பைக்குகளை வாங்குகின்றனர். அதிலும் ஆக்டிவா, ஸ்கூட்டி, ஃபசினோ, டியோ போன்ற வண்டிகள் அதிகம் விற்பனையாவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக பழைய பைக் மற்றும் கார்களின் விற்பனை கடந்த 4 மாதங்களை ஒப்பிடும்போது 20% முதல் 30% வரை அதிகரித்துள்ளது. அதேபோல் வாகன உதிரிபாகங்கள், டயர் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஒருபுறம்  விற்பனை அதிகரித்தாலும் மறுபுறம் ஏற்கனவே வாங்கிய கார்களுக்கு இஎம்ஐ செலுத்த முடியாமல் அதனை விற்பதும் அதிகரித்துள்ளது. தற்போது இருக்கும் நிலை மேலும் தொடர்ந்தால் பொதுப் போக்குவரத்தின் நோக்கமே சவாலுக்குள்ளாகலாம்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading