ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் பருவமழை 27% அதிகம்... வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் பருவமழை 27% அதிகம்... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மழை

மழை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு பகுதியில் நிலவுவதாக தகவல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

    சென்னையில் பருவமழை வழக்கத்தை விட 27% அதிகமாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஆங்காங்கே கனமழை தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளதாகவும், 16 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும், 108 இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு பகுதியில் நிலவுவதாகவும் டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீர்காழியில் 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இந்த மழைக்கு மேக வெடிப்பு ( Cloud Burst ) காரணம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும் என்றும், 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

    அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை பருவமழை வழக்கத்தை விட 27% அதிகமாகவுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chennai, Heavy rain, MET warning, Weather News in Tamil