கொரோனாவால் தனிமைப்படுத்திக்கொண்ட முதியவர்கள்: உறவினர்களே கொள்ளையடித்த 250 சவரன் நகைகள்.. நடந்தது என்ன?
கொரோனாவால் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த முதியவர்கள் வீட்டி்ல், உறவினர்களே 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்ததாக தெரியவந்துள்ளது. தொழில் கூட்டணி, கொள்ளைக்கு வழிவகுத்தது எப்படி?
- News18 Tamil
- Last Updated: October 8, 2020, 8:26 AM IST
சென்னை தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் 71 வயதான நூரில்ஹக். இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஆயிஷா.வீட்டில் நூரில்ஹக் தம்பதி மற்றும் மனைவியின் அக்கா, அவரது கணவர் ரூபிள், இவர்களது மகன் முஸ்தபா, பேரன் மொய்தீன் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு இருந்து வந்தனர். புதன்கிழமை மாலை நூரில் வீட்டிற்கு சென்ற மர்ம கும்பல் ஒன்று கையில் அரிவாளை காட்டி ஓட்டுனர் அப்பாஸை மிரட்டி கட்டிபோட்டனர்.
பின்னர் வீட்டிற்குள் நுழைந்து, நூரில் உள்ளிட்ட 5 பேரையும் தனித்தனி அறைகளில் கட்டிப் போட்டு விட்டு, 250 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த ஹோண்டாசிட்டி காரையும் திருடிக் கொண்டு உறவினர் முஸ்தபாவை அந்த கும்பல் கடத்திச் சென்று தியாகராயநகரில் உள்ள தனியார் துணிக்கடை வாசலில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து நூரில் ஹக் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது வந்த நபர், நுாரில் மனைவியின் அக்கா கணவர் ரூபிளின் உறவினர் மைதீன் எனத் தெரியவந்தது. ரூபிளும், மைதீனும் உறவினர்கள்; இருவரும் இணைந்து தொழில் நடத்தி வந்த நிலையில் மைதீனிடம் ரூபிள், 40 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.
அந்தக் கடனை ரூபிள் திருப்பித் தராத நிலையில், புதன்கிழமை அன்று மைதீன் சில நபர்களுடன் நுாரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ரூபிள் உள்ளி்ட்டவர்களுடன் முதலில் மைதீன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் படிக்க.. Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 08, 2020)
அதில் பயன் கிடைக்காது என்று தெரி்ந்த நிலையில், அனைவரையும் கட்டிப் போட்டு நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார் என்கின்றனர் போலீசார். நகைகளுடன் தூத்துக்குடியில் மைதீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
பின்னர் வீட்டிற்குள் நுழைந்து, நூரில் உள்ளிட்ட 5 பேரையும் தனித்தனி அறைகளில் கட்டிப் போட்டு விட்டு, 250 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த ஹோண்டாசிட்டி காரையும் திருடிக் கொண்டு உறவினர் முஸ்தபாவை அந்த கும்பல் கடத்திச் சென்று தியாகராயநகரில் உள்ள தனியார் துணிக்கடை வாசலில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து நூரில் ஹக் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.