முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 25 வயதில் மாரடைப்பு?.. நடந்து சென்றபோது மயங்கி விழுந்த இளம் மருத்துவர் மரணம்..!

25 வயதில் மாரடைப்பு?.. நடந்து சென்றபோது மயங்கி விழுந்த இளம் மருத்துவர் மரணம்..!

மருத்துவர் மரணம்

மருத்துவர் மரணம்

பாலாஜியின் மரணத்திற்கு உண்மையிலேயே மாரடைப்புதான் காரணமா அல்லது மரணத்தில் மர்மம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பாலாஜி நாராயணன். 25 வயதான இவர் ரஷ்யாவில் மருத்துவம் படித்துவிட்டு கோவாவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருடன் படித்த நண்பர் திலீப்குமார் என்பவர் சில வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது 30வது நாள் துக்க நிகழ்வில் பங்கேற்க சென்னை வந்த பாலாஜி, அங்கு சென்று துக்கம் விசாரித்துவிட்டு சென்னை விருகம்பாக்கத்திலுள்ள தனது சகோதரர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார் பாலாஜி. அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வர வழைத்து  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே பாலாஜி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றிய தகவலறிந்த விருகம்பாக்கம் காவல்துறையினர், பாலாஜியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாலாஜியின் மரணத்திற்கு உண்மையிலேயே மாரடைப்புதான் காரணமா அல்லது மரணத்தில் மர்மம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 25 வயதில் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Cardiac Arrest, Death