எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து மாணவி, மாணவர் தற்கொலை!

தற்கொலைக்கு மாணவர்களின் மன அழுத்தமே காரணம் என எஸ்.ஆர்.எம். பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து மாணவி, மாணவர் தற்கொலை!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: May 28, 2019, 10:34 AM IST
  • Share this:
சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் ஒரு மாணவியும், மாணவரும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் முதலாமாண்டு படித்துவந்த ஜார்கண்ட் மாநில மாணவர் அனுஷ் சவுத்ரி என்பவர் நேற்று விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி சொந்த பிரச்னை காரணமாகவும், மாணவர் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியாலும் தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... ரூ.500-க்காக மனைவியை தீயிட்டு கொளுத்திக் கொன்ற கணவன்
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading