போலி ஆவணங்களுடன் 2 சிறுமிகளை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முயன்ற இருவர் கைது

அவர்கள் 4 பேரும் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் வங்காள தேசத்தில் இருந்து சாலை மார்க்கமாகவும் மற்றும் ரயில் மூலமாகவும் சென்னை வந்ததாக கூறினார்கள்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 4:19 PM IST
போலி ஆவணங்களுடன் 2 சிறுமிகளை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முயன்ற இருவர் கைது
கைதான வங்கதேச குற்றவாளி
Web Desk | news18
Updated: July 26, 2019, 4:19 PM IST
மலேசியாவில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி 2 சிறுமிகளை கடத்தி விற்க திட்டமிட்ட இரண்டு பேர், போலி ஆவணங்களுடன் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வழியாக மலேசியா செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வங்கதேசத்தைச் சேர்ந்த மனூன் மிஹா, மாபூர் மசூத் ஆகிய இரு நபர்கள் சமா, யாஸ்மின் என்ற இரு சிறுமிகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்துள்ளனர்.

அவர்களை சோதனை செய்தபோது இரு சிறுமிகளின் பாஸ்போர்ட் போலியானது என தெரியவந்தது. மேலும், தாங்கள் தேனிலவு செல்வதாக கூறி அவர்கள் காண்பித்த திருமண சான்றிதழும் போலி என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 சிறுமிகளுக்கும் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி, அவர்களை விற்க திட்டமிட்டதாக இரு நபர்களும் வாக்குமூலம் அளித்தனர்.


அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிகளை அழைத்துச் செல்ல அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...