திமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீசியதாக இருவர் கைது!

பரமசிவம் வீட்டை  அந்த தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பார்வையிட்டு காவல்துறையில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீசியதாக இருவர் கைது!
பெட்ரோல் குண்டு
  • News18
  • Last Updated: April 17, 2019, 9:38 AM IST
  • Share this:
சென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்-ஐ. கட்சிகளைச் சேர்ந்த 2 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை டி.பி சமுத்திரம் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் பரமசிவம் வீட்டில் கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அவரது FORTUNE கார் சேதமடைந்தது. தீயை விரைவாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உடனே தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் பரமசிவத்தின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் அமமுக கட்சியினருக்கும், பாமகவைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது.


இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த யூனிஸ், PFI கட்சியைச் சேர்ந்த உமர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பரமசிவம் வீட்டை  அந்த தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பார்வையிட்டு காவல்துறையில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... வேலுாரில் தேர்தல் ரத்தானது ஜனநாயகப் படுகொலை - மு.க ஸ்டாலின்  தமிழகத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

Also see... தேனியில் துப்பாக்கிச்சூடு நடத்தி அமமுக அலுவலகத்தில் அமமுக அலுவலகத்தில் சோதனையிட்ட பறக்கும் படை: ரூ 1.48 கோடி பறிமுதல்


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading