சென்னையில் மொத்த வியாபார கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை.. கிரில் கேட்டை உடைத்து வெள்ளி மற்றும் வைர நகைகளும் திருட்டு

Youtube Video

சென்னை, தியாகராய நகரில், நகை மொத்த விற்பனை நிலையத்தில் இருந்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

 • Share this:


  சென்னை தியாகராய நகர், மூசா தெருவில் உள்ள உத்தம் என்ற மொத்த நகை விற்பனை நிறுவனத்தை, 3 பங்குதாரர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு, இங்கிருந்து மொத்த விற்பனை நடைபெற்றுள்ளது. வெளிநாடுகளுக்கும் தங்க நகைகளை ஏற்றுமதி செய்துள்ளனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று, 2 அலமாரிகளில் இருந்த 4.5 கிலோ தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க...மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

  இந்த சம்பவம் தொடர்பாக, மாம்பலம் போலீசார் வழக்குப்பதிந்து, 5 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். சம்பவ இடத்தில் இணை ஆணையர்கள் பாபு மற்றும் ஹரிஹரன் ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: