சென்னையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண் புரோக்கர்கள் கைது

News18 Tamil
Updated: July 11, 2019, 11:12 PM IST
சென்னையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண் புரோக்கர்கள் கைது
கோப்புப்படம்
News18 Tamil
Updated: July 11, 2019, 11:12 PM IST
சென்னையில் 15 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பெண்களை போலீசார் கைதுசெய்தனர். சிறுமியை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 5 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 3-ம் தேதி தனது பாட்டியுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறுமி வீடு திரும்பாததால் இதுகுறித்து 3 நாட்களுக்கு பிறகு அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பிய சிறுமி, தான் வீட்டை விட்டு வெளியேறியதும், அன்னை சத்யா நகரை சேர்ந்த சபீனா என்பவரது வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளார். அப்போது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி சபீனா மற்றும் முபீனா பேகம் ஆகியோர் தன்னை புரசைவாக்கத்தில் உள்ள நிஷா என்பவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், 5 நாட்களுக்கு பிறகு அங்கிருந்து தப்பி வந்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.


இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நிஷா, சபீனா மற்றும் முபீனா பேகம் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 5 நபர்களை தேடி வருகின்றானர்.

Also Watch:

Loading...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...