ஜாலியாக சுற்றித் திரியும் வாகன ஓட்டிகள்: சென்னையில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா?

வழக்கமான விடுமுறை நாட்களில் எவ்வாறு சாலைகளில் செல்வார்களோ, அதுபோலவே இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாரை சாரையாக சென்னை சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.

ஜாலியாக சுற்றித் திரியும் வாகன ஓட்டிகள்: சென்னையில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா?
சென்னை
  • Share this:
சென்னை முழுவதும் 147 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

அச்சுறுத்திவரும்  கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் இன்று இரண்டாவது நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்பதற்காக மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 5 நபர்களுக்கு மேல் பொது இடத்தில் கூடி நின்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வாகனங்களில் செல்லக்கூடாது எனவும் சென்னை காவல்துறை ஆணையரும், மாநகராட்சி ஆணையரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.


இந்த நிலையில் வாகனங்களில் பொது மக்கள் சாலைகளில் செல்வதை தவிர்ப்பதற்காக சென்னை முழுவதும் 147 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிநாடு சென்று வந்தவர்கள் பொதுவெளியில் நடமாடியதற்காக 5 நபர்கள் மீதும் தடை உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடியதற்காக 7 நபர்கள் மீதும் சாலைகளில் தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றதற்காக 89 நபர்கள் மீதும் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் ஊரடங்கு உத்தரவின் முதல்நாளான நேற்று பொதுமக்கள் சிலர் சாலைகளில் வாகனங்களில் சென்றதை நம்மால் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவின் இரண்டாம் நாளான இன்று பொதுமக்கள் வழக்கமான விடுமுறை நாட்களில் எவ்வாறு சாலைகளில் செல்வார்களோ, அதுபோலவே இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாரை சாரையாக சென்னை சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி சென்னையில் சிலர் சாரை சாரையாக வாகனங்களில் செல்வது பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.

Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்