ஸ்டைலாக தலைமுடி வைப்பதை கண்டித்த தாய்... பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை...!

ஸ்டைலாக தலைமுடி வைப்பதை கண்டித்த தாய்... பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை...!
தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன் மற்றும் அவரது தாய் மோகனா
  • News18
  • Last Updated: January 20, 2020, 11:41 AM IST
  • Share this:
சென்னையில் தலைமுடியை வெட்டிக்கொள்வது தொடர்பாக தாயுடன் ஏற்பட்ட தகராறில் 12-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் வ.ஊ.சி தெருவை சேர்ந்த பாத்திரம் துலக்கும் தொழிலாளி மோகனாவின் மகன் சீனிவாசன், குன்றத்துரில் தங்கி அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த சீனிவாசனை அவரது தாயார் சலூன் கடைக்கு அழைத்துசென்று முடி வெட்டியுள்ளார்.


ஸ்டைலாக முடிவெட்ட அனுமதிக்காமல் சலூன் கடை வரை வந்து தாய் முடிவெட்ட வைத்ததால் மனமுடைந்த சீனிவாசன், தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால், அவரை தாயார் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே, கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மகனும் தற்கொலை செய்து கொண்டதால் தான் அனாதையாக இருப்பதாக மோகனா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Also see...
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்