10-ம் வகுப்பு மாணவனை சரமாரியாக கத்தியால் தாக்கிய கும்பல்... சென்னையில் பரபரப்பு

மாணவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10-ம் வகுப்பு மாணவனை சரமாரியாக கத்தியால் தாக்கிய கும்பல்... சென்னையில் பரபரப்பு
சிசிடிவி காட்சிகள்
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 12:33 PM IST
  • Share this:
சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கும்பலை பிடிக்க போலீசார் தீவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருக்கம்பாக்கத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். அவரது மகன் தியாகு பத்தாம் வகுப்பு மாணவனான இவரை நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாணவனை தாக்கிய கும்பலை சேர்ந்த ஒருவர் ரவுடி புறா மணி என்பவரது சகோதரர் சுமன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் முன்விரோதம் காரணமாக வேறு ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு அங்கு வந்ததாகவும் அவர் இல்லாத காரணத்தினால் ஆத்திரமடைந்து மாணவனை தாக்கி விட்டு சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க...பெற்றோரின் மனநிலையை அறிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading