• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரூ.10க்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் கோபால் மரணம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ரூ.10க்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் கோபால் மரணம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மருத்துவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது புகழ் பல்லாண்டு காலம் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை வண்ணாரப்பேட்டையில் பத்து ரூபாய் மருத்துவர் என்று அழைக்கப்படும் மருத்துவர் கோபால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த கோபால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும், பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்.,-ஸும் படித்தார். வண்ணாரப்பேட்டையில் 1969-ம் ஆண்டு முதல், சிறிய அளவில் கிளினிக் வைத்து 2 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலித்தார்.

    1976 முதல் 5 ரூபாய் வாங்கினார். பின்னர் மக்களே 10 ரூபாய் வழங்கத் தொடங்கினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய அவர், 2002-ம் ஆண்டு முதல் ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.



    தொடர்ந்து மருத்துவம் பார்த்துவந்த அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது புகழ் பல்லாண்டு காலம் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: