சிண்டிகேட் வங்கியில் போலி நகைகள் மூலம் ரூ.1.20 கோடி மோசடி... நகைமதிப்பீட்டாளர் மற்றும் காதலி கைது

சென்னையிலுள்ள சிண்டிகேட் வங்கியில் 101 முறை போலி நகைகளைப் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

சிண்டிகேட் வங்கியில் போலி நகைகள் மூலம் ரூ.1.20 கோடி மோசடி... நகைமதிப்பீட்டாளர் மற்றும் காதலி கைது
சிண்சிகேட் வங்கி
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 3:03 PM IST
  • Share this:
சென்னை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள சிண்டிகேட் வங்கியின் மூத்த கிளை மேலாளராக பணிப்புரிந்து வரும் பொலுகரி பிரவீன் குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் தங்கள் வங்கியில் ரிசர்வ் வங்கி உத்தரவின் அடிப்படையில் பல்வேறு பொதுமக்களுக்கு கோல்டு லோன் வழங்கி வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் பொதுமக்களிடம் பெற்ற தங்கத்தை கடந்த மாதம் 30ஆம் தேதி வங்கி அலுவலர்கள் சோதனை செய்து பார்க்கும் போது 101 முறை போலி நகைகளை கொடுத்து ரூபாய் 1.20 கோடி பணம் மோசடி நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே இந்த மோசடியானது இந்த வங்கியில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் நகை மதிப்பீடு செய்து பார்க்கும்போது இந்த விஷயம் வங்கி மேலாளருக்கு தெரியவந்துள்ளது. வங்கி ஊழியர்கள் மோசடி எப்படி நடந்தது என சோதனை செய்தபோது போலி நகைகள் அனைத்தும் வங்கியில் வேலை பார்க்கும் நகை மதிப்பீட்டாளரான திருவல்லிக்கேணியை சேர்ந்த முரளி என்பவர் மூலமாகவே அடகு வைக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நகை மதிப்பீட்டாளரான முரளி தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மூலம் போலி நகை பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதேபோல நகை மதிப்பீட்டாளர் முரளி தனது நண்பர்கள் உறவினர்கள் மூலம் 101 முறை போலி நகைகளை பெற்றுக்கொண்டு ரூபாய் 1.20 கோடி பணம் கொடுத்ததும் மேலும் தனக்கென ஒரு கமிஷன் எடுத்துக்கொண்டு இத்தகைய மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க...கடந்த 2 நாட்களில் முட்டை விலை கடும் உயர்வுவழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நகை மதிப்பீட்டாளர் முரளி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த முரளியின் காதலி சாந்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading