முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிளாட்பாரத்தில் நடந்து சென்ற பெண் ஐடி ஊழியர் பலி... பெண்ணின் தந்தை கண்ணீர்

பிளாட்பாரத்தில் நடந்து சென்ற பெண் ஐடி ஊழியர் பலி... பெண்ணின் தந்தை கண்ணீர்

பெண் ஐடி ஊழியர் பலி

பெண் ஐடி ஊழியர் பலி

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடத்தை இடித்துக்கொண்டிருந்தபோது சுற்றுச்சுவர் சரிந்து நடைமேடை மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி பத்மபிரியா என்ற ஐ.டி.ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

ஐ.டி. துறையில் முன்னேறி ஊருக்கு வருவதாக கூறிச் சென்ற மகள், சடலமாக வந்திருப்பதாக சென்னையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடத்தை இடித்துக்கொண்டிருந்தபோது சுற்றுச்சுவர் சரிந்து நடைமேடை மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி பத்மபிரியா என்ற ஐ.டி.ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர், ஜேசிபி ஓட்டுனர் பாலாஜி ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கட்டட உரிமையாளர் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இளம்பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து பத்மபிரியாவின் உறவினர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

' isDesktop="true" id="880837" youtubeid="yZklkY386SM" category="tamil-nadu">

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட உறவினர்கள், பிரேத பரிசோதனைக்கு பிறகு பத்மபிரியாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

First published:

Tags: Chennai