• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செங்கம் : இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் பரிதாப பலி

செங்கம் : இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் பரிதாப பலி

இரண்டு குழந்தைகளையும் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.

  • Share this:
    செங்கம் அருகே இனிப்பு பலாக்கரங்கள் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவத்தால்  கிராமம் மக்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளிக்கு யாஷினி என்ற 6 வயது பெண் குழந்தையும் ஸ்ரீஹரி என்ற 4 வயது குழந்தையும் உள்ளனர். இவர்களுக்கு செங்கம் அருகே உள்ள இறையூர் தனியார் பேக்கரியில் பொங்கலுக்காக இனிப்பு வாங்கி வந்துள்ளனர். இரண்டு குழந்தைகளும் இனிப்பு மற்றும் வீட்டில் செய்திருந்த வடை ஆகியவை சாப்பிட்டு உள்ளனர்.

    பின்னர் பலக்காரங்கள் சாப்பிட்ட சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஸ்ரீஹரி  மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததாகவும் இதனைத்தொடர்ந்து யாஷினி வாந்தி எடுத்து மயக்க நிலையை அடைந்துள்ளனர். பின்னர் இரண்டு குழந்தைகளையும் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.

    அதன்பின் அவர்கள் இருவருக்கும் மீண்டும் இரவு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்த பின்னர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யாஷினி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மேலும் ஸ்ரீஹரி தொடர்ந்து மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார்.

    பின்னர் இரண்டு குழந்தைகளையும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

    ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் பொங்கலுக்காக செய்யப்பட்டிருந்த பலகாரம் மற்றும் தனியார் பேக்கரியில் வாங்கி வந்த ஜாங்கிரி லட்டு மைசூர்பாகு போன்ற தின் பண்டங்களை சாப்பிட்டு ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் நரசிங்கநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர் சம்பவம் குறித்து பாச்சல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனியார் பேக்கரியில் இருந்து கொண்டுவந்த இனிப்புகலால் இறப்பு ஏற்பட்டதா அல்லது வீட்டில் செய்த பலகாரத்தை ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தின்பண்த்தில் கலந்து கொடுத்தார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: