ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகத்துக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகத்துக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தடுப்பூசி மையத்தை அமைப்பதற்கான பணிகள் 594 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012-ம் ஆண்டு தொடங்கிய நிலையில், தற்போதைய மதிப்பீடு 904 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி ஆய்வகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் வகையில், உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  நாட்டில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஹெச்எல்எல் பயோடெக் தடுப்பூசி ஆய்வகத்தில் தடுப்பு மருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆய்வுசெய்தார்.

  அப்போது, இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர், இதற்கு தமிழக அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

  மத்திய அரசின் நிறுவனமான ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்திற்கு உற்பத்தியைத் தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

  தடுப்பூசி மையத்தை அமைப்பதற்கான பணிகள் 594 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012-ம் ஆண்டு தொடங்கிய நிலையில், தற்போதைய மதிப்பீடு 904 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், தடுப்பூசி உற்பத்தி நடைபெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Corona Vaccine, DMK, MK Stalin