செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை ஏற்று நடத்த தமிழக அரசு முடிவு - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தொற்றை கட்டுப்படுவத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

 • Share this:
  செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதி வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

  தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க உலகளாவிய டெண்டர் கோரப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

  செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி ஆய்வகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் தமிழக அரசு நடடிவடிக்கை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு நடத்தினார். இதனிடையே ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தொற்றை கட்டுப்படுவத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

  இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும். தடுப்பூசி மையத்தை தமிழக அரசு ஏற்று தனியார் நிறுவன உதவியுடன் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்படுத்துவோம்“ என்று பிரதமர் மோடிக்கு வலியுறுத்திள்ளார்.
  Published by:Vijay R
  First published: