• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இலவச பயணத்திற்கு வருகிறது முடிவு...! மீண்டும் திறக்கும் தேதி அறிவிப்பு

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இலவச பயணத்திற்கு வருகிறது முடிவு...! மீண்டும் திறக்கும் தேதி அறிவிப்பு

பரனூர் சுங்கச்சாவடி

பரனூர் சுங்கச்சாவடி

  • News18
  • Last Updated :
  • Share this:
    செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கச்சாவடியில் சுமார் 1 மாதமாக வாகனங்கள் கட்டணமின்றி சென்று வந்த நிலையில், மீண்டும் சுங்கச்சாவடியை இயக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டை அடுத்த பரனூரில் இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் அமைத்துள்ள செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி கடந்த ஜனவரி 26-ம் தேதி நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்டது.

    அரசுப்பேருந்து ஓட்டுநர் - சுங்கச்சாவடி ஊழியர் இடையே ஏற்பட்ட மோதல் பெரிதாக வெடித்து, பேருந்தில் இருந்த பயணிகள் சுங்கச்சாவடியை சூறையாடினர். இதில் பயங்கர மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் 7 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    மேலும், சுங்கச்சாவடி ஊழியர்களே அங்கிருந்த பணத்தை திருடியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு சுங்கச்சாவடி ஜனவரி 26-ம் தேதி முதல் தற்போது வரை சுங்க கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனரகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக வருகிற 25-ம் தேதி முதல் செங்கல்பட்டு சுங்கச்சாவடி மீண்டும் திறக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. அடித்து நொறுக்கப்பட்ட அனைத்து கண்ணாடிகளும் புதுப்பிக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள், மின் விளக்குகள் மற்றும் சிக்னல் விளக்குகள் ஆகியவை பழுது பார்க்கப்பட்டுள்ளன. கணினி உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களும் சரிபார்க்கப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: