ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செங்கல்பட்டு- தாம்பரம் போக்குவரத்து நெரிசல்: அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

செங்கல்பட்டு- தாம்பரம் போக்குவரத்து நெரிசல்: அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

ங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும் பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை போடுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வருவதற்கும் செல்வதற்குமான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு உயர்மட்ட சாலை அமைக்க மத்தியஅரசிடம் வலியுறுத்தி வருவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

  சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தின் போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ., ஈஸ்வரன், சென்னைக்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும், முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதாகவும், செங்கல்பட்டு மற்றும் ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான திட்டம் அரசிடம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

  இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வருவதற்கு 1 மணி நேரத்துக்கும் மேல் ஆவதாகவும், இதே போல் ஸ்ரீபெரும்புதூரில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பது அரசுக்கு தெரியும் என்றும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும் பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை போடுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், விரைவாக பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

  இதையும் படிங்க: ஜெயலலிதா, மகாமகம் சம்பவத்தை குறிப்பிட்டு செல்வபெருந்தகை பேச்சு.. அதிமுக எதிர்ப்பு- வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

  மேலும், எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மணப்பாறை, முசிறி இருவழிச்சாலைகளை 4 வழிச் சாலைகளாக மாற்றி அமைக்கும் பணியை தலைமைப் பொறியாளரின் ஆய்வு முடிந்த பின், நிதிநிலைக்கேற்ப இந்த ஆண்டே பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஒசூர் சாலையை 4 வழி சாலையாக மாற்றுவது குறித்தும் இந்த ஆண்டிலேயே முடிவெடுக்கப்படும் என்றும், பழனி சாலையை அகலப்படுத்தும் பணி ஆய்வு நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Chengalpattu, Tambaram, TN Assembly, Traffic