மாமண்டூர் புதிய பாலாற்று மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று மீண்டும் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் அருகே, பாலாற்றின் மீது இரு மேம்பாலங்கள் உள்ளன. இதில், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் பழைய பாலம் சேதமடைந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில்,பிப்.7ம் தேதி முதல் சீரமைப்பு பணி நடந்தது.
இதனால், தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை நோக்கி வரும் வாகனங்கள், மாமண்டூர் அருகே மெய்யூர் வழியாக திருப்பி விடப்பட்டன. பிலாப்பூர், காவூர், காவியதண்டலம், ஓரக்காட்டுப்பேட்டை மேம்பாலம் வழியாக பழத்தோட்டம் சென்று, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையை அடைந்து, சென்னை நகருக்கு இயக்கப்பட்டன.
மேலும் படிக்க: பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
அதேநேரத்தில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டும் புதிய பாலத்தில் அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் போக்குவரத்து நெரிசல், மாற்றுப்பாதை தூரம் போன்ற காரணங்களில் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனிடையே, பாலாற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் பிப்.24ம் தேதி முதல் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த பாலம் பணி முடிவடைந்த பின்னர் பக்கவாட்டில் உள்ள மற்றொரு பாலமும் இதேபோல் சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அதன்படி, 20 நாட்களுக்கு முன்பாக பாலாற்றின் புதிய பாலத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதையடுத்து, மீண்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மார்க்கம் வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது புதிய பாலம் சீரமைப்பு பணிகளும் நிறைவு பெற்று பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்லாமல் வழக்கம்போல் சென்னைக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Chengalpet, Palar River, Traffic