Home /News /tamil-nadu /

கூடுவாஞ்சேரியை சூழ்ந்த வெள்ள நீர்... சென்னை- திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்காடு

கூடுவாஞ்சேரியை சூழ்ந்த வெள்ள நீர்... சென்னை- திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்காடு

சாலைகளில் வெள்ள நீர்

சாலைகளில் வெள்ள நீர்

  கனமழை காரணமாக நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பியது. வெள்ள நீர் அதிகளவு வெளியேறிவருவதால்  மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஒருசில இடங்களில் கழுத்தளவு வெள்ள நீர் தேங்கியுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நந்திவரம் ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் கூடுவாஞ்சேரியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் சென்னையின் தியாகராய நகர், மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளிலும் முழங்கால் அளவு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்துவருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக முக்கிய அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. குற்றாலம், அகஸ்தியர் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  கனமழை காரணமாக நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பியது. வெள்ள நீர் அதிகளவு வெளியேறிவருவதால்  மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஒருசில இடங்களில் கழுத்தளவு வெள்ள நீர் தேங்கியுள்ளது. அங்கிருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.



    கூடுவாஞ்சேரி அருகே உள்ள வல்லாஞ்சேரி ஏரியிலிருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேறுவதால் சென்னை- திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,  இன்று காலை ஜிஎஸ்டி சாலை எப்படி இருந்தது என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சாலையே தெரியாத அளவு வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.



    ஊரப்பாக்கம், தாம்பரம் மணிமங்கலம் போன்ற பகுதிகளில் சாலையில் நீர் சூழ்ந்துள்ளதாக அப்பகுதிவாசிகள் ட்விட்டரில் வீடியோ, புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர். புறநகர் பகுதி மட்டுமல்லாது, சென்னையின் முக்கியபகுதிகளான பாரீஸ் கார்னர், தியாகராய நகர் போன்ற பகுதிகளில் சாலைகளில் மழை நீர் அதிகளவு தேங்கியுள்ளது, மழை நீர் தேங்கியுள்ளதால்  தி.நகர் ரங்கராஜபுரம் மற்றும் மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டது. வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    இதையும் படிங்க: தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை புறநகர் பகுதிகள்.. வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Flood, Very Heavy rain, Weather News in Tamil

    அடுத்த செய்தி