Home /News /tamil-nadu /

ஊரப்பாக்கத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு.. ஆட்சியரிடம் மனு

ஊரப்பாக்கத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு.. ஆட்சியரிடம் மனு

புதியதாக திறக்கப்படும் அரசு மதுக்கடை

புதியதாக திறக்கப்படும் அரசு மதுக்கடை

TASMAC | அனைத்து தரப்பினருக்கும் மிகவும் சிரமமாகவும் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகும் என்பதால் அந்தப் பகுதியில் புதிய மதுபான கடைக்கு அனுமதி வழங்க கூடாது என பொதுமக்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஊரப்பாக்கம் அருகே புதியதாக அரசு மதுபான கடை அமைவதை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி, அருங்கால், கீரப்பாக்கம், காட்டூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் அருகிலேயே தேவாலயங்கள், திருக்கோவில்கள், பூங்கா,மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் அமைந்துள்ளது.

    இந்நிலையில் ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி சாலையில் உள்ள சிவம் அவென்யூ சர்வே 205/49,50 அடங்கியுள்ள மனைகளில் புதியதாக அரசு மது கடை துவங்கப் போவதாக அந்தப் பகுதி முழுவதும் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் புதிதாக மதுக்கடை துவங்கினால் ஊரப்பாக்கம் பகுதியிலிருந்து காரணை புதுச்சேரி வழியாக செல்லும் சாலையில் கிராமபுற பகுதிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் செல்லக்கூடிய  மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதோடு அச்சுறுத்தலும் ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் கவலை தெரிவித்துள்ளனர்.  எனவே,  புதிய மதுபான கடைக்கு அனுமதி வழங்க கூடாது என பொதுமக்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    புதிய அரசு மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு


    முன்னதாக, குறிப்பிட்ட பகுதியில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடையைத் திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை பரிசீலித்து கடையை திறக்கக்கூடாது என சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : ராபர்ட் எபினேசர் துரைராஜ்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai, Tasmac

    அடுத்த செய்தி