தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 3,290 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

  • Share this:
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களயும் கொரோனா பாதிப்பு கடந்த ஓராண்டாக ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த சில தினங்களாக குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்திருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாசிட்டிவிட்டி ரேட் அதிகரித்த நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தினந்தோறும் கடுமையாக அதிகரித்துவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,92,780 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டோரின் ஆண்கள் 1,899 பேருகும், பெண்கள் 1,391 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இன்று 1,715 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 8,61,424 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,750 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே போல இன்று 86,066 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1,94,42,502 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறையினரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1188, செங்கல்பட்டு மாவட்டத்தில் 280, கோவையில் 277, திருவள்ளூரில் 183, திருச்சியில் 122, தஞ்சையில் 120, காஞ்சிபுரத்தில் 119, மதுரையில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 18,606 ஆக உயர்ந்துள்ளது.
Published by:Arun
First published: