சென்னையில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் ஒரே நாளில் 6,703 பேருக்கு தொற்று உறுதி!

சென்னையில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் ஒரே நாளில் 6,703 பேருக்கு தொற்று உறுதி!

கொரோனா

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்ந்துள்ளது.

  • Share this:
தமிழகத்தில் ஒரே நாளில் 6,703 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் தீவிரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் தற்போது கொரோனா வேகம் எடுக்கத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 6,703 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2,105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 பேருக்கும், கோவையில் 604 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்ந்துள்ளது. இதே போல இன்று 82,982 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 2,06,03,108 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,339 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 8,80,910 பேர் குணமடைந்துள்ளனர்.

இதே போல இன்று மட்டும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,927 ஆக அதிகரித்துள்ளது.
Published by:Arun
First published: