ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செங்கல்பட்டில் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி.. செல்ஃபி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டதா? போலீஸார் விசாரணை

செங்கல்பட்டில் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி.. செல்ஃபி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டதா? போலீஸார் விசாரணை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Chengalpattu : செங்கல்பட்டு  மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் விரைவு ரயிலில் அடிபட்டு மூன்று இளைஞர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். உடல்களை கைப்பற்றிய ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செங்கல்பட்டு  மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் மூன்று இளைஞர்கள் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்த போது, எதிர்பாராத விதமாக, புதிதாக அமைக்கப்பட்ட இருப்புப் பாதையில் ரயில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த இளைஞர்கள் நேற்று, மாலை தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து வழக்கம்போல பேசிக்கொண்டும், செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில்,

சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது அவர்கள், ரயில்வே இருப்புப் பாதையில் நின்று செல்போனில் வீடியோக்களை பதிவு செய்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதிய விபத்தில் பிரகாஷ் (17), மோகன் (17), அசோக்குமார் (24) ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் தினந்தோறும் ஒன்றாக கூடி இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் வீடியோக்களை பதிவிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Must Read : திமுக கவுன்சிலரின் தந்தை அடித்துக்கொலை.. பணம் கொள்ளை... கும்பகோணத்தில் பரபரப்பு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயிலில் அடிபட்டு மூன்று இளைஞர்கள் பலி

செல்பி எடுத்துக் கொண்டு இருந்த போது விபத்து ஏற்பட்டதா, அல்லது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அங்கே கைப்பற்றப்பட்ட செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

செய்தியாளர் : ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு

First published:

Tags: Chengalpattu, Death, Train Accident