செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலாற்றில்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 50 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் கடந்த 7ம் தேதி முதல் சீரமைக்கும் பணி தொடங்கியது. 20 நாள் நடைபெறும் இந்த சீரமைப்பு பணிகள் காரணமாக மற்றொரு பாலத்தில் வாகனங்களை அனுமதித்தனர்.
இந்நிலையில், பாலாற்று பாலம் பராமரிப்பு பணி காரணமாக, புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்து பழைய சீவரம் வழியாக செங்கல்பட்டுக்கு கனரக வாகனங்கள் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை மெய்யூர், பிலாப்பூர் வழியாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலை வழியாக சென்று சென்னை செல்கிறது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டுமே புதிய பாலத்தில் அனுமதிக்கப்படுகின்றன.
Also Read : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி
தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய முக்கியமான பாதையில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினார். குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு மாற்றுப்பாதை தூரமாக இருந்ததால் அவர்களுக்கு அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில்சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நாளை நள்ளிரவு முதல் பொதுப் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.