Home /News /tamil-nadu /

மகாத்மா காந்தி கால் பதித்த அச்சரபாக்கம் ரயில் நிலையத்தை மூட திட்டம் - மக்கள் எதிர்ப்பு

மகாத்மா காந்தி கால் பதித்த அச்சரபாக்கம் ரயில் நிலையத்தை மூட திட்டம் - மக்கள் எதிர்ப்பு

அச்சரபாக்கம் ரயில் நிலையம்

அச்சரபாக்கம் ரயில் நிலையம்

1946-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் அச்சிறுபாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்து சிறப்புரையாற்றியனார்.

    மகாத்மா காந்தியடிகள் கால் பதித்த செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் ரயில் நிலையத்தை மூட ரயில்வே நிர்வாகம் முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கைவிட்டு ரயில் நிலையத்தை சீரமைக் தவறினால் போராட்டம் நடத்துவோம் என்று மக்கள் எச்சரித்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சிறுபாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, மருத்துவம் போன்ற தேவைகளுக்காக ரயில் மூலம் நாள்தோறும் பயணம் செய்து வந்தனர்.

    ஆனால், கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி அச்சிறுபாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பயணச்சீட்டு வழங்குவதை நிறுத்திய நிர்வாகம், பின்னர் இரு மார்க்கங்களிலும் அச்சிறுப்பாக்கத்தில் நின்று சென்ற திருப்பதி, புதுச்சேரி, விழுப்புரம் பயணிகள் ரயில்களை நிற்க விடாமல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ரயிலில் நாள்தோறும் பயணம் செய்து வந்தவர்கள் தற்போது மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்று பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    Also Read : ''முதலமைச்சரின் தகவல் பலகை” இன்று திறப்பு - சிறப்பம்சம் என்ன?

    1946-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் அச்சிறுபாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்து சிறப்புரையாற்றிய வரலாற்று சிறப்புமிக்க ரயில் நிலையத்தை காந்தியின் நினைவாக சீரமைத்து நினைவுச் சின்னங்களை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.



    சென்னையிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களை அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும், மலைமாதா கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக காரைக்கால் வேளங்கண்ணி விரைவு ரயில் அச்சிறுபாக்கத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

    Also Read : தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார்: அமைச்சர் சேகர் பாபு

    கிராமங்கள் நிறைந்த மாவட்டமான செங்கல்பட்டில் ஏழை, எளிய மக்கள் அன்றாட பணிக்காக பயன்படுத்தும் ரயில் நிலையங்களை மூடும் போக்கை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்பதே மக்களன் எதிர்பார்ப்பு.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai, Gandhi

    அடுத்த செய்தி