• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுபோதையில் பாலாற்று பாலத்தின் அடியில் தூங்கிய இளைஞரை அடித்துச் சென்ற வெள்ளம்.. 3 நாட்கள் போராட்டத்திற்கு பின் மீட்பு!

மதுபோதையில் பாலாற்று பாலத்தின் அடியில் தூங்கிய இளைஞரை அடித்துச் சென்ற வெள்ளம்.. 3 நாட்கள் போராட்டத்திற்கு பின் மீட்பு!

மதுபோதையில் பாலாற்று பாலத்தின் அடியில் தூங்கிய இளைஞர் 3 நாட்களாக சிக்கித் தவித்த நிலையில், தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

  • Share this:
    மதுபோதையில் பாலாற்று பாலத்தின் அடியில் தூங்கி பின்னர் மீளமுடியாமல் 3 நாட்களாக தவித்த இளைஞரை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது அருந்துவதற்காக பாலாற்று அடிப் பாலத்திற்கு சென்றார். மது அருந்திய உதயகுமார் அங்கேயே போதையில் படுத்து தூங்கிவிட்டார். பின்னர் கண் விழித்து பார்த்தபோது இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பார்த்தார். ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுவதால் அங்கிருந்து நகர முடியாமல் தவித்தார்.

    இவ்வாறு மூன்று நாட்களாக அங்கேயே வெள்ளத்துக்கு நடுவே சிக்கித் தவித்தார். ஆனால் பாலத்தின் அடியில் பாதுகாப்பாக நின்று கொண்டு அவ்வழியாக செல்வோரிடம் உதவி கோரினார். ஆனால் எவர் காதிலும் விழவில்லை. 3 நாட்களுக்குப் பிறகு அவரைக் கவனித்த பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், பாலாற்றில் சுமார் 13 ஆயிரத்து 500 கன அடி நீர் சென்று கொண்டிருப்பதால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

    உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின் போராடி பாலாற்றின் கீழ் சிக்கியிருந்த நபரை 3 நாட்களுக்குப் பிறகு மீட்டனர். போதையால் 3 நாள் அன்னம் தண்ணீர் இன்றி தவித்தவரை, மருத்துமனையில் சேர்த்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: