விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு முதலுதவி அளித்து உதவி செய்த தமிழிசை

விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு முதலுதவி அளித்து உதவி செய்த தமிழிசை

தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த தமிழிசை சவுந்தர்ராஜன், வழியில் இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இரத்த காயத்துடன் கிடப்பதை கண்டு அவருக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்தார்.

 • Share this:
  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

  புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த தமிழிசை, வழியில் இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இரத்த காயத்துடன் கிடப்பதை கண்டு அவருக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்தார். தொடர்ந்து தனது பாதுகாப்புக்காக வந்த காவல் வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தார்.

  மருத்துவரை தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழிசை கேட்டுக் கொண்டார்.

   

      

   

      

   

  இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதற்கு ஆளுநர் மட்டுமல்ல,சிறந்த மருத்துவ தம்பதியர் என்பதை நிருபித்தீர் அக்கா என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து தமிழிசை பதில் அளித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: