Home /News /tamil-nadu /

தந்தை கண்முன்னே மகன் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு.. சேலையூரில் அடுத்தடுத்து நடந்த விபத்துகள்

தந்தை கண்முன்னே மகன் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு.. சேலையூரில் அடுத்தடுத்து நடந்த விபத்துகள்

தாம்பரம் விபத்து

தாம்பரம் விபத்து

தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டதால் சேலையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாம்பரம் அருகே சாலை விபத்தில் தந்தை கண்முன்னே  மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் .இவருடைய மகன்  ஸ்ரீதர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தாயை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக தனது தந்தையுடன் இரண்டு  இரு சக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்தார்.
    அப்பொழுது ஆதிநகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறிய ஸ்ரீதர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் அந்த வழியாக வந்த அரசு  மாநகர பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தந்தை கண் முன்னே விபத்தில் மகன் உயிரிழிந்தால் துக்கம் தாங்க முடியாமல் தந்தை அழுத காட்சி அங்கு இருக்கும் மக்களிடம்  பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த சில நிமிடங்ளில் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த தாஸ் அவருடைய மனைவி எஸ்தர் இருவரும் இருசக்கர வாகனத்தில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆதிநகர் பகுதியில் கட்டுமானப்  பொருட்களை இறக்கி வைத்து விட்டு வேகமாக சாலையை கடக்க முயன்ற மினி வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த அதிர்ச்சியில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்த எஸ்தர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காதில் இருந்து ரத்தம் வெளியேறியது.

    இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆபத்தான நிலையில் இருந்த எஸ்தரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே இடத்தில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டதால் சேலையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர்: சுரேஷ்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Road accident, Tambaram

    அடுத்த செய்தி