ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஹேர் கலரிங் செய்ததை கண்டித்த கல்லூரி நிர்வாகம்.. மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஹேர் கலரிங் செய்ததை கண்டித்த கல்லூரி நிர்வாகம்.. மாணவி தூக்கிட்டு தற்கொலை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Hair coloring கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தலை முடியில் கலர் ஹேர்டை அடித்து சென்ற கல்லூரி மாணவியை, பெற்றோரை அழைத்து கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால்,வீடு திரும்பிய கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  சென்னை தாம்பரம், கடப்பேரி, திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர், இவரது தலைமுடிக்கு கலரிங் செய்தபடி கல்லூரிக்கு சென்று உள்ளார். இதனையடுத்து அவரை கண்டித்த கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோரை வரவழைத்து கல்லூரிக்கு இது போன்று வரக்கூடாது என கூறி கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

  Also Read: கள்ளத்தொடர்பு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி.. தந்தையை மகனே கொன்றது விசாரணையில் அம்பலம்

  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று மாலை வீட்டில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து தாம்பரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  செய்தியாளர்: சுரேஷ்

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Commit suicide, Crime News, Hair care, Hair coloring, Tambaram