Home /News /tamil-nadu /

அரசு பள்ளியில் இடிந்து விழுந்த முகப்பு சுவர் - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மாணவர்கள்

அரசு பள்ளியில் இடிந்து விழுந்த முகப்பு சுவர் - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மாணவர்கள்

அரசு பள்ளியில் இடிந்து விழுந்த முகப்பு சுவர்

அரசு பள்ளியில் இடிந்து விழுந்த முகப்பு சுவர்

Chengalpattu Government School | செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென பள்ளியின் முன் பகுதியில் உள்ள முகப்பு சுவர் இடிந்து விழுந்ததது.

  • News18
  • Last Updated :
செங்கல்பட்டு அருகே அரசு பள்ளியில் முகப்பு சுவர் இடிந்து விழுந்த  நிலையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் மாணவர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென பள்ளியின் முன் பகுதியில் உள்ள முகப்பு சுவர் இடிந்து விழுந்ததது.

சுமார் 1200 மாணவர்கள் இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை  படித்து வருகின்றனர். இந்நிலையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென முகப்பு சுவர் இடிந்து விழும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடமானது திடீரென இடிந்து விழுந்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Also read... கொலை வழக்கில் கைதான இந்து முன்னணி நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

மேலும் பள்ளி வளாகத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் வகுப்பறைகளும் கழிப்பறை மற்றும் கட்டிடங்கள் உள்ளன. அப்பகுதியில் மாணவர்கள் உலாவி வரும் நிலையில் அத்தகைய கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-செய்தியாளர்: ராபர்ட் எபினேசர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Chengalpattu, Government school

அடுத்த செய்தி