இரவு ஊரடங்கு : சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

இரவு ஊரடங்கு : சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

மாதிரி படம்.

தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, வார நாட்களில் ( திங்கள் - சனி) ரயில் சேவை விவரம்:

  1) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் = 150 சேவைகள்

  2) சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி / சூலூர்பேட்டை மார்க்கம் = 64 சேவைகள்

  3) சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் = 68 சேவைகள்

  4) சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம் = 152 சேவைகள் என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.

  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக் கிழமைகளில்,

  1) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் = 32 சேவைகள்

  2) சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை மார்க்கம் = 24 சேவைகள்

  3) சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் = 12 சேவைகள்

  4) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம் = 18 சேவைகள். என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

  அத்துடன், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்தில் இருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது. இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை நாளை (22.04.2021) வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read : கொரோனா பரவல்: யு.ஜி.சி., நெட் தேர்வுகள் தள்ளிவைப்பு

   

  கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் இந்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: