சென்னை அடுத்த தையூரில் ஐஐடி டிஸ்கவரி ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரம்

Youtube Video

சென்னை அடுத்த தையூரில் ஐஐடி டிஸ்கவரி ஆய்வு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு செயல்படவுள்ள கடல் சார் மற்றும் துறைமுக ஆராய்ச்சி ஆய்வகம் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

 • Share this:
  ஐஐடி,கண்டுபிடிப்பு வளாகம்,பிரதமர் மோடி,ஆய்வு மையங்கள்உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய, டிஸ்கவரி வளாகத்தை உருவாக்கும் முயற்சியை சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ளது. இதற்காக 2017ம் ஆண்டு தமிழக அரசு செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் 163 ஏக்கர் நிலத்தை ஐஐடிக்கு ஒதுக்கியது. அங்கு கடல்சார் மற்றும் துறைமுகங்கள் ஆராய்ச்சிக்காக ஒரு ஆய்வகமும், விமானப்படை விமானங்களின் எஞ்சின் வடிவமைப்புக்காக மற்றொரு ஆய்வகமும் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளுக்கு அண்மையில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

  இந்த ஆய்வு மையங்கள் இந்தாண்டு இறுதிக்குள் செயல்பட தொடங்கும் என கூறப்படும் நிலையில், தற்போது சென்னை ஐஐடி வளாகத்தில் சிறிய அளவில் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் ஆய்வுப்பணிகளில் ஈடுபடும் விதமாக இந்த ஆய்வகங்கள் செயல்படும்.

  மேலும் படிக்க...தமிழகத்தில் ரூ. 31,500 கோடி மதிப்பிலான பெட்ரோலியத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

  துறைமுகப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது, கப்பல்களை தங்குதடையின்றி இயக்குவது குறித்து ஆய்வகத்தில் இருந்தபடியே ஆய்வு செய்ய முடியும். Virtual reality தொழில்நுட்ப அடிப்படையில், கடலில் இருந்தபடியே 360 டிகிரி கோணத்தில் ஆய்வு செய்யலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கப்பல் மற்றும் துறைமுகத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய பொருட்கள் கண்டறியப்பட்டால், அதை ஆய்வகத்தில் சோதித்து சந்தைப்படுத்த முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: