முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு

சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை டிக்கெட் வழங்கப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 6 ரயில் நிலையங்களில் மீண்டும் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்தாண்டு பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் மட்டும், பிளாட்பார்ம் டிக்கெட் நேற்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

இதனிடையே, பிளாட்பார்ம் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் நோக்கிலான புதிய கட்டணம், வரும் ஜூன் 15ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க... தமிழகத்தில் மீண்டும் 1000ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு...

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Indian Railways, Railway Station