• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் தேர்வு பயம் காரணமாக தீக்குளித்த மாணவி 27 நாட்கள் கழித்து உயிரிழப்பு

நீட் தேர்வு பயம் காரணமாக தீக்குளித்த மாணவி 27 நாட்கள் கழித்து உயிரிழப்பு

மாணவி உயிரிழப்பு

மாணவி உயிரிழப்பு

நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்வை சரியாக எழுதவில்லையோ என்ற  அச்சம் காரணமாக கடந்த மாதம் 17ஆம் தேதி மாணவி அனு தீக்குளித்தார்.

  • Share this:
    சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் நீட் தேர்வு பயத்தால் தீக்குளித்த மாணவி 27 நாட்கள் கழித்து  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர்  12 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார்ஒரு லட்சத்து 10 ஆயிரம்  மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள்.  தேர்வு பயம் காரணமாக ஒருசில மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துகொண்டனர்.

    இதேபோல்,  செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். சேத்துப்பட்டு எம்.சி.சி.. பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மனைவி ஷீபா மாடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனு நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்வை சரியாக எழுதவில்லையோ என்ற  அச்சம் காரணமாக  கடந்த மாதம் 17ஆம் தேதி தீக்குளித்தார்.

    இதையும் படிங்க: சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம்!


    உடனடியாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அவர் அனுமதிக்கப்பட்டார்.

    கடந்த 27 நாட்களாக  அனுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார்.

     

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: