Home /News /tamil-nadu /

மேல்மருவத்தூரில் குவிந்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து.. தேசிய நெடுஞ்சாலையில் டிராபிக் ஜாம்

மேல்மருவத்தூரில் குவிந்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து.. தேசிய நெடுஞ்சாலையில் டிராபிக் ஜாம்

மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூர் கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    மேல்மருவத்தூரில் கோவிலுக்கு வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தியதும் 5 கிலோ மீட்டர் அளவிற்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்.

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவில் செயல்பட்டு வருகிறது. வருடா வருடம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு இருமுடி கட்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மாநிலத்திலிருந்து குறிப்பாக கர்நாடகா ,ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மேல்மருவத்தூருக்கு பேருந்துகளில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    குறிப்பாக இந்த இரு முடி காணிக்கை செலுத்துவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டுமே நடைபெறும் இந்த இரண்டு மாதத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் வரை வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.  இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து மேல்மருவத்தூர்  கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்ள வந்த 35 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்மருவத்தூர் கோவிலில் இருக்கும் பணியாளர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒருநாள் வைரஸ் தொற்றுக்கு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தால் தமிழகத்தில் பொது  அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த வாரம் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவில்களில் மூடுவதற்கு தற்போது உத்தரவிட்டுள்ள நிலையில் அதிக அளவு பொதுமக்கள் இன்றே மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று முடி காணிக்கை செலுத்த வேண்டுமென குவிந்திருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    ஒரே நாளில் பெருமளவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் தரிசனம் புரிய பொதுமக்கள் வருகை புரிந்து உள்ளதால் அவர்கள் வந்த வாகனங்கள் அனைத்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது.

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு) 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Hindu Temple, Trichy

    அடுத்த செய்தி